*தோழர் தங்கவேல் அருமையான கட்சி ஊழியர். பீடி தொழிலாளர் சங்கத்தின் கள ஊழியர். பிராஞ்ச் ஆபீஸ்களில், கொத்து கொத்தாக வீடுகளில் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு சங்க அறிக்கைகளை விநியோகிப்பது, தீக்கதிர் விநியோகிப்பது, சந்தா வசூலிப்பது போன்றவை இவரின் வேலை. அவ்வப்போது கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற பேங்குக்கு வருவார். சந்தா வசூலில் வந்துவிட்டது என்பார். மாற்றித் தருவேன். ஐந்து பத்து நோட்டுகள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக இருந்து முப்பது என்று அதிகரித்தது. சரி, வேறு எங்கு போவார் என்று மாற்றித் தருவேன். இப்படி மாதா மாதம் வருவார். பின்னர் சில மாதங்களாக வருவதேயில்லை. அவரை கட்சி கூட்டத்தில் பார்த்தபோது. ஏன் வருவதில்லை என்று விசாரித்தேன்.*
*"இருந்தாலும் சில தொழிலாளர்களுக்கு சந்தாவை கிழிந்த நோட்டாக தருவதே வேலையாகப் போய்விட்டது தோழா. நல்ல நோட்டு வச்சிகிட்டே கிழிந்த நோட்டை தள்ளிவிடறாங்க. இது சரியில்லைன்னு சொல்லிட்டேன். சந்தாவுக்கே மரியாதை இல்லாமல் போகுதில்லே."*
*தன்னையே ஆமோதித்து நகைத்தவாறு போய்விட்டார்.*
No comments:
Post a Comment