தாயின் அன்பு அளவிட முடியாதாது. குழந்தையை திணறடித்துவிடும். தாய் பொழியும் முத்த மாரியை அனுபவிக்க முடியாமல் திணறி தப்பித்து ஓடும், வெள்ளத்திலிருந்து தப்பிப்பதைப் போல. ஆகவே தாய் குழந்தைக்கு பாலூட்டும் போதே அணைத்து அன்பையும் பரிமாறுவாள். வளர்ந்த மகனையும்/மகளையும் அள்ளி அணைத்திட தாயுள்ளம் பதறும். வளர்ந்த பிள்ளைகளுக்கு அது வெட்கத்தைத் தரும். ஆகவே பாலூட்டி அன்பைப் பரிமாரியதைப் போலவே உணவு பரிமாறி, உண்ணவைத்து கனிவாக அன்பையும் பரிமாறுவாள்.இந்த தாயன்புதான் பொருள் பொதிந்த வாழ்க்கையாக ஒவ்வொரு மனிதனையும் நகர்த்திச் செல்கிறது. தாய்க்குப் பிறகு, தன்தாயைப்போலவே குழந்தைகளிடத்தில் அன்பு காட்டும் மனைவியைப் பார்த்த பிறகுதான், தாயிடம் பெற்ற அன்பின் தொடர்ச்சியைப் பார்த்த பிறகுதான், வாழ்வின் பொருள் பொதிந்த ஒன்று தொடர்ந்து நிலவுவதைப் பார்த்த பிறகுதான் நிம்மதியாக வாழ்க்கையைத் தொடரமுடிகிறது. இது தாய் முன்மாதிரியாக காட்டிய அன்பு.
இதனை தாயைப் போலவே தந்தையோ, தமக்கையோ, தனையனோ காட்ட முடியும். அப்போதும் அதற்கு பெயர் தாயன்புதான். அது எல்லா நேரத்திலும் நேர்வதில்லை. அப்படி அமைந்தாலும் அது தாயன்புக்கு இணையானது மட்டுமே ஈடானதல்ல