Sunday, December 20, 2020

டெல்லி வீதிகளில் விவசாயிகளின் வீர நடை

*டெல்லி வீதிகளில் விவசாயிகளின் வீர நடை*


லாப வெறியும் மதவெறியும் கூட்டு சேர்ந்திருக்கு 

ஆதார உழவுத் தொழிலை விழுங்க பாக்குது 

விவசாய பெருங்குடியை வீழ்த்தப் பாக்குது

ஆட்சி கிளையில் அமர்ந்து கொண்டு

அடிமரத்தை சாய்க்குது


தொழிலாளர் தோழர் எல்லாம் அரசியலை பார்க்கணும் 

அரசியல் என்னும் மூச்சு காற்றில் மாசு கலந்திருக்கு 

நமக்கான அரசியலை கைக்கொள்ள வேண்டும் 

விவசாய நண்பனுக்கு தோள் கொடுக்க வேண்டும் 


இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுதும் இல்லை 

உழவர் வாழ்வில் கலந்திருக்கு மக்களின் வாழ்வனைத்தும் 

சூழ்ச்சியை வீழ்த்தும் பலம் உழைப்போரிடமே 

செயலூக்கம் பெறுவோம் இக்கணமே.


ஒன்றுதிரண்ட சக்தியாய் எழுவோம்

சதிகளை வீழ்த்த உறுதியாய் நிற்போம்

காலம் இடும் கட்டளையை கடமையாக ஏற்போம்

களத்தை நமதாக்குவோம் இறுகப் பற்றி நிற்போம்


ஏர் உழவன் பார்க்காத போர்க்களமா 

ஏறிநின்று சாய்க்காத ஏற்றமா 

கருத்தாக பிடுங்காத களையா

நேரத்தில் அறுக்காத அறுவடையா


போட்டு பார்க்குது சதிகார கும்பல் 

மூன்று சட்டத்தை 

போட்டுப் பார்க்குது அதிகாரத் திமிரில்

ரோடுக்கு வந்தது விவசாய படை

கலங்கி நிற்குது அதிகார படை


தண்ணீரை பாய்ச்சினால் கரைந்து போகுமோ 

தடியடி நடத்தினால் கலைந்து போகுமோ

தடிப்பிடித்த வயித்துக்கு சோறிட்டு வாழ்த்துது

தவித்த வாய்க்கு தண்ணீர் தருகுது.


பேசாமலே போட்டட சட்டம் பற்றி

பேசலாம் என்குது ஊளை சத்தம்

போட்ட சட்டத்தை வீசியெறி

பேசலாமென்குது போர்க்குரல்


பெருந்தொற்றையும் பார்க்காமல்

தீட்டிய சதிகளனைத்தும்

உலகமே பார்க்கும் வண்ணம்

வெட்ட வெளிச்சமாச்சு.


கார்ப்பரேட் கட்டளையை கைவிட மனமின்றி

கை கூப்பி கெஞ்சுது வெட்கமின்றி

நாடகம் நடத்தும் மேடையா இது

போர்க்களமாகிவிட்ட சரித்திர மேடையிது

வாழும் முடிவும் இங்கேதான்

வாழ்வை முடிக்கவுமானாலும் இங்கேதான்


திண்ணமாய் இருப்பவரின் எண்ணம்

சதிகாரன் எண்ணத்தை வீழ்த்துவது திண்ணம்

கார்ப்பரேட் அதர்மத்தை வீழ்த்த

உழவரோடு இணைவான் பாட்டாளியும்.



போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வங்கி ஊழியர் நடத்தும் காத்திருப்பு போராட்டத்தில் வாசிப்பதற்காக பெங்களூருவிலிருந்து

சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்.

Chetput Panchapakesan Ravisankar.



Monday, December 7, 2020

நாடே எழுந்து நிற்கின்றது

 நாடே எழுந்து நிற்கின்றது


டெல்லி வீதிகளில் வீர நடை போட்டு

போராட்டம் ஒன்று நடக்கின்றது - அந்த

விவசாயிகளின் போராட்டம் வெல்ல

நாடே எழுந்து நிற்கின்றது



கார்ப்பரேட் டுக்கு காவு கொடுக்கும்

மூன்று சட்டங்களை

நாடாளுமன்ற நடைமுறை மீறி

நைச்சியமாக இயற்றுவதா

விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்காமல்

மாண்டது போதாதா - இன்னும் 

நிலங்களைப் பறித்து நிர்க்கதியாக்க 

சட்டம் இயற்றுவதா

      - டெல்லி வீதிகளில்


தேர்தல் அறிக்கையை ஜூம்லா என்ற

வெட்கங்கெட்ட அரசு இது 

இந்திய நாட்டின் உணவு சுய சார்பை

அலட்சியமாக அழிக்கிறது - இனி

பொறுப்பதில்லை என வெகுண்டெழுந்து

புறப்பட்டதோர் பெரும்படை

வீரன் பகத்சிங் வாரிசுகள்

முன்கை எடுத்த படையிது

வெற்றியோடு தான் திரும்புவோமென 

ஆர்பரிக்குது டெல்லியிலே

உழுவோருக்கு 

நன்றிக் கடனாய்

நாமும் இணைவோம்

அவருடனே

ஒன்றிணைந்து போராடுவோம்

ஒன்றிணைந்தே வெல்லுவோம்

  - டெல்லி வீதிகளில்


https://youtu.be/3DDg2b0eW8M

https://youtu.be/uX9N2UOMFSg