Sunday, October 3, 2021

நகர தொழிற்சங்க பணிகளில்

 *தோழர் பரமசிவம் என் அப்பாவால் கவரப்பட்டு அற்பணிப்போடு இயக்கப் பணியாற்றும் தோழர். தொலை பேசி துறை. அவர்  எல்லோரையும் பிரதர் என்று அழைத்ததால் அவருக்கு அதுவே செல்லப் பெயராகிவிட்டது.*


*தோழர் K G Bose என்ன சொன்னார் என்ற உரையாடலோடு தொடங்கி என்னை நகர தொழிற்சங்க பணிகளில் ஈடுபடுத்திவிட்டார். மே தினம், Central State Public Sector Convention, City Trade Union Council என்று அனைத்திலும் நடை பெறும் நிகழ்வுகளுக்கான தயாரிப்புக் கூட்டத்தில் அமர்ந்து முடிவுகளை குறிப்பெடுப்பது, ஹால், மைக், அழைப்பிதழ், போஸ்டர்,நினைவூட்டல், வரைவு தீர்மானம் என்று அனைத்து பணிகளிலும் என்னை ஈடுபடுத்தி விடுவார்.*


*என்னுடன் படித்த நண்பர்களில் கணிசமான எண்ணிக்கையினர் பட்டதாரி ஆசிரியர்கள். அவர்களில் சிலர் சங்க நிர்வாகிகள். அவர்களின் தொழிற்சங்கம் போராட்ட அறை கூவல் விடுத்தது. ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்களில் நகரின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் வாழ்த்தி பேச ஏற்பாடு செய்ய உதவியாய் இருந்தேன். கோஷம் எழுப்ப, வீதியில் இறங்கி போராட அவர்களுக்கு இருந்த தயக்கத்தை உடைத்தேன்.*


*ஒரு நாள் ஒரு சிஐடி போலீஸ் காசோலைக்கு பணம் பெற வங்கிக்கு வந்திருந்தார். என்னை கேஷ் கவுண்டரில் பார்த்துவிட்டு வியப் படைந்தார். "நீங்க கம்யூனிஸ்டுன்னு தெரியும். சிஎம்சியில் வேலை பார்ப்பவர் என நினைத்தேன். பின்னர் எல்ஐசி ஊழியர் என நினைத்தேன். பின்னர் ரெயில்வே, தொலை பேசி ஊழியர் அல்லது ஆசிரியர் என் எண்ணினேன். பார்த்தால் ஸ்டேட் பேங்குல கமுக்கமாக உக்காந்து கிட்டு இருக்கீங்க" என்று வியப்புடன் கேட்டார்*

No comments:

Post a Comment