Sunday, October 3, 2021

ஸ்டேட் பேங்க் தொழிற்சங்கத்தில்...

 *நான் ஸ்டேட் பேங்கில் கமுக்கமாக இருந்தேனா?*


*"நீ வேலை செய்யுமிடத்தில் நீ சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடாமல் என்ன வர்க்கம் போராட்டம் நடத்தப் போகிறாய்?" தொழில் புரியும் வங்கிக் கட்சிக் கிளையில் உறுப்பினராக இல்லாமல் வசிக்குமிடத்தில் கட்சி உறுப்பினர்களாக செயலாற்றுபவர்களைப் பற்றி குறிப்பிட்டு தோழர் பி டி ரணதிவே கேட்பார்.*


*1969, முதல் இருதரப்பு ஒப்பந்தம் காலத்தில் வங்கிப் பணியில் சேர்ந்தேன். 1/1/1970 முதல் இரண்டாம் இருதரப்பு ஒப்பந்தம். இதனை விளக்கி வெற்றி கூட்டமாக நான் படித்த கல்லூரி கேலரி அறையில் SBSU கூட்டம். மாசிலாமணி தான் அப்போது பொதுச் செயலாளர். Area abolitionல் மூன்றாவது ஏரியாவுக்கு நியாயம் மறுக்கப்பட்டள்ளதை பற்றி கேட்டேன். "ஒரு வருடம் கூட சர்வீஸ் இல்ல. இவ்வளவு பேருக்கு எழாத கேள்வி உங்களுக்கு எப்படி?" என்று பதில்.* 


*ஸ்டேட் பேங்கில் probationக்கு பிறகு மூன்று வருட சர்வீஸ் முடிந்தால் வீட்டுக் கடன் உண்டு. ஆனால் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலமாகத்தான். அதற்கான வேலைகளை தொடங்க முயற்சித்தேன். அதுமட்டுமில்லாமல் கிளைத் தேர்தலில் நானும் இன்னொரு கேஷியரும் வேட்பு மனு தாக்கல் செய்தோம்.வேலூரில் சிஎம்சி எதிரில் துவங்க இருந்த கிளைக்கு நாங்கள் இருவரும் மாற்றப் பட்டதாக கடிதம் தரப்பட்டு, ஆகவே எங்களின் வேட்பு மனு ரத்தாகி விட்டதாக அறிவிப்பு பலகை கூறியது. அந்த கிளைக்கென்று  வெளி ஊரிலிருந்து இருவர் எங்கள் கிளையில் காத்திருப்பில் இருப்பதை சுட்டிக் காட்டி கேட்டதுதான் மிச்சம். ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை என்ற அதிகாரப்பூர்வமற்ற ஏற்பாடு ஒன்று நடைமுறையில் இருந்ததால் உடன் பணி புரிவோர் தங்கள் இயலாமையை எங்களை கேலி செய்வதன் மூலம் திரையிட்டுக் கொண்டனர்.*

No comments:

Post a Comment