அகில இந்திய நவம்பர் மாத
வேலைநிறுத்தம்
அனைத்துப் பகுதி தொழிலாளர்
வாழ்க்கைப் போராட்டம்
ஒன்றிணைந்து போராடுவோம்
ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்
பன்னாட்டு சுரண்டல் கூட்டம்
ஒண்ணா சேர்ந்து நிக்குது
ஒட்ட சுரண்டும் திட்டம் போட
லேபர் கோடு துடிக்குது
பாடுபடும் பாட்டாளியை
உதிரியாக்க பாக்குது
ஒன்றுபட்ட போராட்டத்தை
சட்டம் போட்டு தடுக்குது
சட்டம் மீறுவோம்
தடைகள் உடைப்போம்
ஒன்றிணைந்து போராடுவோம்
எட்டு மணி வேலையை
12 மணி ஆக்குது
பாட்டாளியின் உடல்நலனை
கேலியாக பாக்குது
அடிமட்ட கூலி என்ற
புதிய சட்டம் நுழையுது
குறைந்தபட்ச கூலி யிலே
தண்ணியை ஊத்த பாக்குது
சட்டம் மீறுவோம்
தடைகள் உடைப்போம்
ஒன்றிணைந்து போராடுவோம்
சங்கம் வைக்கும் சரத்துக்களை
கிடுக்கி போட்டு முடுக்குது
சங்கம் சேரும் உரிமைக்கு
பங்கம் வைக்க பாக்குது
வேலை நிறுத்த நிபந்தனைகளை
கடுமையாக மாத்துது
கூட்டு பேர உரிமைக்கு
வேட்டு வைக்க பாக்குது
சட்டம் மீறுவோம்
தடைகள் உடைப்போம்
ஒன்றிணைந்து போராடுவோம்
புதிய பெயரில் புதிய சட்டம்
புதிய வரையறை
இருக்கும் பல உரிமைகளை தூக்கி வீசுது - இது
யாருக்கான சட்டம் என்று
தெரியுதா?
ஒட்ட சுரண்டும் சட்டம் என்று புரியுதா?
சட்டம் மீறுவோம்
தடைகள் உடைப்போம்
ஒன்றிணைந்து போராடுவோம்
அனைவருமே ஒன்றிணைய
மும்முரமாவோம்
வேலைநிறுத்தம் வெற்றிபெற
பாடுபடுவோம்
அனைத்துப் பகுதி மக்களுடைய
நலன்களைக் காக்க
ஒன்றிணைந்து நிற்பதற்கு
சபதம் ஏற்போம்
ஒன்றிணைந்து போராடுவோம்
ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்
அகில இந்திய நவம்பர் மாத
வேலைநிறுத்தம்
அனைத்துப் பகுதி தொழிலாளர்
வாழ்க்கை போராட்டம்
ஒன்றிணைந்து போராடுவோம்
ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.
- சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்.
No comments:
Post a Comment