Sunday, November 8, 2020

பதின்ம வயது காதல்

"மகளிர் சிந்தனை" டிசம்பர் 2020 இதழில் வெளியாகியுள்ளது.

சும்மாதானே பாக்குறேன்

அதுக்கு ஏண்டி முறைக்கிறே

உன்னை பாக்க வந்தாக்க

விரலை காட்டி மிரட்டுற- உன்

கண்ணு ரெண்டும் கொக்கி போட்டு

பாரு பாருன்னு சொல்லுது - உன்

சிரிப்பு என்னை கட்டி போட்டு

பின்னாலயே இழுக்குது.

சும்மாதானே பாக்குறேன்

அதுக்கு ஏண்டி முறைக்கிறே

உன்னை பாக்க வந்தாக்க

விரலை காட்டி மிரட்டுற

                  

                      -சும்மாதானே


பேசி பழகி நட்பை சொல்ல

மனசு கிடந்து தவிக்குது

சுத்தும் முத்தும் கேள்வி கேட்டு 

நிக்க வுடாம துரத்துது

பார்வையால் பேசுறேன்

பாவத்தாலே சொல்லுறேன்

புரியுமுன்னு நம்புறேன்

நாளை திரும்பி வருகிறேன்.

                 

                                -சும்மாதானே


படிச்சு முடிச்சு வேலைக்கு போயி

திரும்பி வந்தா ஏத்துப்பியா

சாதி சனங்க பேச்சை கேட்டு

மவுனமாவே நிப்பியா

உனக்கும் காதல் இருக்குதுன்னு

நினைக்கிறேன் - அதை 

வெளியே சொல்ல தயங்குறேன்னு

வருந்துறேன்

உனக்கும் தவிப்பு வருமுன்னுதான்

நம்புறேன்

அது வரைக்கும் காத்திருப்பேன்

இப்போ போகிறேன் 

இப்போ போகிறேன்                  

                                 - சும்மாதானே


காதல் நெஞ்சம் பெண் மனதைப் 

போற்றிடும்

பெண்ணின் முடிவை முடிவாக 

ஏற்றிடும்

புடிக்குதுன்னா புடிக்குதுன்னு

 சொல்லிடு

காதல் வாழ்க வாழ்க என்று

முழுங்குறேன்

புடிக்கலைன்னா புடிக்கலைன்னு

சொல்லிடு

எங்கிருந்தாலும் வாழ்க என்று

வாழ்த்துறேன்


சும்மா இனியும் பாக்கமாட்டேன் பெண்ணே

சும்மா இனியும் பாக்கமாட்டேன் பெண்ணே - நீ

கண்களாலே சிரித்தாலும்

சத்தம் போட்டு சிரித்தாலும் 

சம்மதமின்றி சிரிக்கமாட்டேன் கண்ணே - உன்

சம்மதமின்றி சிரிக்கமாட்டேன் கண்ணே - உன்

சம்மதமின்றி சிரிக்கமாட்டேன் கண்ணே,


https://youtu.be/jSLwpigilkQ

No comments:

Post a Comment