Wednesday, November 9, 2022

தோழனென்று சொல்லடா

தோழனென்று சொல்லடா

தோள்கள் கொட்டி செல்லடா

வர்க உணர்வு கொள்ளடா

தோல்வி நமக்கு ஏதடா 


மீண்டும் மீண்டும் வீழ்ந்த போதும்

எழுந்து நின்றிருக்கிறோம்

இயக்கவியலை கற்றறிந்து 

தெளிவு கண்டிருக்கிறோம்


இடர்கள் வந்த போதிலும்

துச்சமென்றிருக்கிறோம்

போராட்ட பாதையிலே 

வீறுகொண்டு செல்கிறோம்


தடியடியும் ரவை குண்டும்

நெஞ்சில் ஏந்தி நிற்கிறோம்

குண்டர் போலிஸ் ராணுவமும்

தோற்றதுதான் சரித்திரம்



சோஷலிஸ சமுதாயம் 

எங்களது லட்சியம்

சமத்துவ சமுதாயம் 

நிச்சயம் நிச்சயம்

No comments:

Post a Comment