Wednesday, December 18, 2013

நந்திதா



மெல்லிய உறை அணிந்த கால்களால் அடவுகள் வைக்கின்றாய்.
பிஞ்சு விரல்களால் முத்திரை பிடிக்கின்றாய்.
விழிகளை  சுற்றியும் செவ்வாயை குவித்தும்
இருபக்கமும் தலையை அசைத்தும் பாவனை செய்கிறாய்.
தூளியில் படுத்தபடியே நீ ஆடும் நடனம்
விண் வெளியில் ஆய்வு செய்யும் வீராங்கனையை
அபினயத்ததுபோல் இருக்கின்றது.
நந்திதா நீ கலை நயம் கைவரப்பெற்ற‌
அறிவார்ந்த பெண்ணாவாய்.

No comments:

Post a Comment