தீபாவளிக்கு இரண்டாம் நாள்
நரகாசுரனின் தீபாவளி கொண்டாட்டம் !
ஏகாதிபத்தியத்தின் சாகஸம்.
அன்று
கிழக்கிந்திய கம்பெனி
கிழக்கு கடற்கரை வழியாக
இன்று
அதற்கும் மேற்கே இருந்து
மேற்கு கடற்கரை வழியாக
கருப்பு முகமூடியின் தலைமையில்
ஆயிரக்கணக்கான CEO க்கள்
மந்தத்தின் கோரப் பசியுடன்
போபாலின் ருசியுடன்
சதிகாரப் புன்னகையுடன்
பொதுத்துறையை கபளீகரம் செய்ய
கல்யாண சமையல் சாதம்
சில்லரை வியாபாரமும் பிரமாதம்
மன்மோகன் சோனியா பிரசாதம்
ஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா
மின்னும் இந்திய பரிவாரம் அழைக்க
நாடாளு மன்ற பிரவேசம்
ஆசியாவில் கால் பதிக்கும் ஆத்திரம்.
வியட்னாமின் உதை மறந்ததா ?
ஹோசிமின் கிலி மறைந்ததா ?
சரித்திரம் படைத்த தரித்திர இந்தியா
ரத்த சிகப்பின் பிரகாசத்தில்
ஆர்பரித்து எழுகின்றது.
ஆசியக் கனவின் வாசலை
அடைத்து நிற்கின்றது.
உழைத்து புடைத்த கரங்களுடன்...
வீரம் படைத்த தோள்களுடன்....
ஊன்றி நிலைத்த கால்களுடன்....
நரகாசுரனின் தீபாவளி கொண்டாட்டம் !
ஏகாதிபத்தியத்தின் சாகஸம்.
அன்று
கிழக்கிந்திய கம்பெனி
கிழக்கு கடற்கரை வழியாக
இன்று
அதற்கும் மேற்கே இருந்து
மேற்கு கடற்கரை வழியாக
கருப்பு முகமூடியின் தலைமையில்
ஆயிரக்கணக்கான CEO க்கள்
மந்தத்தின் கோரப் பசியுடன்
போபாலின் ருசியுடன்
சதிகாரப் புன்னகையுடன்
பொதுத்துறையை கபளீகரம் செய்ய
கல்யாண சமையல் சாதம்
சில்லரை வியாபாரமும் பிரமாதம்
மன்மோகன் சோனியா பிரசாதம்
ஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா
மின்னும் இந்திய பரிவாரம் அழைக்க
நாடாளு மன்ற பிரவேசம்
ஆசியாவில் கால் பதிக்கும் ஆத்திரம்.
வியட்னாமின் உதை மறந்ததா ?
ஹோசிமின் கிலி மறைந்ததா ?
சரித்திரம் படைத்த தரித்திர இந்தியா
ரத்த சிகப்பின் பிரகாசத்தில்
ஆர்பரித்து எழுகின்றது.
ஆசியக் கனவின் வாசலை
அடைத்து நிற்கின்றது.
உழைத்து புடைத்த கரங்களுடன்...
வீரம் படைத்த தோள்களுடன்....
ஊன்றி நிலைத்த கால்களுடன்....
No comments:
Post a Comment